
இந்தியாவில் அன்னிய முதலீடு
இந்த முதலீட்டில் இந்தியாவின் பக்கம் திரும்பியது எனலாம். ஏனெனில் சர்வதேச நாடுகள் பலவும் மோசமான சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்தியா மட்டும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இது அன்னிய முதலீட்டாளர்களை இந்தியர்களின் பக்கம் திருப்பியது எனலாம்.

மீண்டும் முதலீடுகள் அதிகரிப்பு
ஆனால் சீன அரசு தங்களது கட்டுப்பாடுகளில் பெரும் தளர்வினை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது சீனாவின் துவண்டு போன தொழில் துறையானது மீளத் தொடங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சி குறித்த காரணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதன் காரணமாக சீனாவில் மீண்டும் முதலீடுகள் அதிகரிக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகிறது.

முதலீடுகள் வெளியேறுமா?
இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் முதலீடுகள் வெளியேறலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இம்மாதத்தில் இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடுகள் பெரியளவில் வெளியேறியுள்ளது. இதன் காரணமாகத் தான் இந்திய சந்தை மற்றும் பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளன.
சீனா இந்தியா என இருபெரும் பொருளாதார நாடுகளும் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளன. .

ஜனவரியில் FPI வெளியேற்றம்
ஏற்கனவே ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய சந்தையில் 18,800 கோடி ரூபாயாக வெளியேறியுள்ளது. இது மாத அடிப்படையில் பார்க்கும்போது ஜூன் 2022ல் 50,203 கோடி ரூபாய் மிக மோசமாக வெளியேறியது. எனினும் அதன் பிறகு அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாக இருந்தனர். அதன் பிறகு டிசம்பர் மாதத்தில் 11,119 கோடி ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 36,239 கோடி ரூபாயாகவும் முதலீடு செய்யப்பட்டது.

முதலீடுகள் வெளியேறலாம்
இந்தியாவில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் மீடியம் டெர்மில் அழுத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், ரெசசன் வரலாமோ என்ற அச்சம் உள்ளது. இது தொடர்ந்து பணவீக்கம் குறையும் வரையில் இனியும் அதிகரிக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. தொடர்ந்து பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.