
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி முறியடிப்பாரா என்ற கேள்வி சுனில் கவாஸ்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனது பதிலை அளித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் ஆயிரம் நாட்கள் சதம் பதிவு செய்ய முடியாமல் தடுமாறி வந்தார் விராட் கோலி. ஆனால் உண்மையாக அவர் 3 சதங்களை வெறும் 30 நாட்கள் இடைவெளியில் பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை பதிவு செய்துள்ளார்.