
பெண்கள் ஐபிஎல்
விரைவில் துவங்கும் மகளிருக்கான ஐபிஎல் போட்டிக்கான உரிமைகளை வாங்க 30க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிருக்கான ஐபிஎல் போட்டி 2023 ஆம் ஆண்டில் துவங்க உள்ளது. முதல் கட்டமாக ஐந்து அணிகள் சாம்பியன்ஷிப் கோப்பைக்காகப் போட்டியிடுகின்றன.

ஆண்கள் ஐபிஎல்
ஆண்களுக்கான ஐபிஎல் அணிகளின் உரிமையைப் பெற்றுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களது சொந்த வர்த்தகத்திலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. இதே மேஜிக் பெண்கள் ஐபிஎல் போட்டிகளிலும் உருவாகும் எனக் கணிக்கப்படுகிறது.

டெண்டர் அழைப்பிதழ்
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் BCCI இன் டெண்டர் அழைப்பிதழ் (ITT) ஆவணத்தைக் கொடுத்து ஐந்து அணிகளுக்கான உரிமையைப் பெற போட்டிப்போட்டு வருகிறது. டெண்டரை வாங்குவது அணியை வாங்குவது கிடையாது, ஏல விண்ணப்பங்களைக் கொண்டு விண்ணப்பதாரரின் தகுதியை ஆய்வு செய்து ஏலம் வாயிலாகவே எடுக்க முடியும்.

ILT20 உரிமையாளர்கள்
ஆர்வமுள்ள நிறுவனங்களின் பட்டியலில் தற்போதுள்ள 10 ஐபிஎல் அணிகளின் அணி உரிமையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ILT20 உரிமையாளர்களான Gulf Giants (Adani Group) மற்றும் Sharah Warriors (Capri Global) இவற்றின் உரிமையாளர்களும் WIPL உரிமைகளை வாங்க ஆர்வமாக உள்ளனர். தவிர, ஸ்நாக்ஸ் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனமான ஹல்திராம் ஐடிடியை வாங்கியுள்ளது.

10 பிரான்சைஸ்
தற்போது ஆண்களுக்கான IPL போட்டியில் இருக்கும் 10 பிரான்சைஸ் உரிமையாளர்கள், இண்டர்நேஷ்னல் லீக் டி20 பிரான்சைஸ் அணிகளான Gulf Gaints (இது அதானி குரூப் அணி), Sharah warriors இதன் உரிமையாளர்களும் பெண்களுக்கான IPL அணி ஏலத்தில் பங்கு பெறுகின்றனர்.

30 நிறுவனங்கள்
இதைத் தாண்டி BCCI அமைப்பின் அழைப்பிதழ் டெண்டர் அறிக்கையை வாங்கிய நிறுவனங்கள் பட்டியில் ஸ்னாக்ஸ் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் ஹல்டிராம் நிறுவனம், APL அப்போலோ, ஸ்ரீராம் குழுமம், நீலகிரி குழுமம், செட்டிநாடு சிமெண்ட், ஜேகே சிமெண்ட், AW கட்குரி குழுமம் போன்ற நிறுவனங்கள் விண்ணப்பங்களை வாங்கியுள்ளன.

BCCI அமைப்பு
இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளரான ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் ஆகியவையும் BCCI அமைப்பின் டெண்டர் அழைப்பு அறிக்கையை தனிப்பட்ட முறையில் வாங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷாருக்கான், ஜூஹி சாவ்லா, ப்ரீத்தி ஜிந்தா
இதேபோல் தற்போது ஆண்களுக்கான ஐபிஎல் போட்டியில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ஜூஹி சாவ்லா மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரும் பெண்களுக்கான ஐபிஎல் போட்டியின் அணி உரிமைகளை வாங்கும் முயற்சியில் உள்ளனர். ஆனால் பாலிவுட்-ல் இருந்து புதிதாக யாரும் சேரவில்லை.

5 அணிகள்
இந்த நிலையில் பெண்கள் ஐபிஎல் போட்டிகளின் 5 அணிகளை வாங்கும் நிறுவனங்கள் எது என்று தெரிந்துகொள்வதில் அனைத்து தரப்பினருக்கும் பெரிய அளவிலான ஆர்வம் உள்ளது. இந்த முயற்சியின் மூலம் இந்திய பெண்கள் அணிக்கான அடுத்த வலிமையான தலைமுறையை உருவாக்க முடியும்.