
மீடியா ரைட்ஸ்
முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிக்கான மீடியா ரைட்ஸ் ஏற்கனவே முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் 18-க்கு 951 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 அணிகளுக்கான உரிமையை விற்பனை செய்யும் பிட்டிங் பணிகள் துவங்கியது.

பெண்கள் பிரிமியர் லீக் போட்டி
மகளிர் பிரிமியர் லீக் எனப் பெயருடன் துவங்கும் பெண்கள் ஐபிஎல் போட்டியில் 5 அணிகளைச் சேர்த்து சுமார் 4669.99 கோடி ரூபாய்க்குப் பிட்டிங் செய்து 5 முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது எனப் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

5 நிறுவனங்கள்
ஏலத்தில் வெற்றிபெற்ற 5 நிறுவனங்கள் பட்டியல் மற்றும் அதன் ஏல தொகை
அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் – 1289 கோடி ரூபாய்
இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் – 912.99 கோடி ரூபாய்
ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் – 901 கோடி ரூபாய்
JSW GMR கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் – 810 கோடி ரூபாய்
கேப்ரி குலோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் – 757 கோடி ரூபாய்

ஆண்கள் ஐபிஎல் – பெண்கள் ஐபிஎல்
இதுமட்டும் அல்லாமல் ஆண்களுக்கு ஐபிஎல் முதல் சீசன் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆண்கள் ஐபிஎல் அணிகளுக்கான உரிமையைக் காட்டிலும் பெண்கள் ஐபிஎல் அணிகளுக்கான உரிமை அதிகத் தொகைக்குப் பிட்டிங் செய்யப்படுகிறது எனவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

30 நிறுவனங்கள் போட்டி
மகளிருக்கான ஐபிஎல் போட்டிக்கான உரிமைகளை வாங்க 30க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியான நிலையில், டாப் 5 தொகையைப் பிட்டிங் செய்யும் தரப்புக்கு தான் 5 அணிகளுக்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் ஐந்து அணிகள் சாம்பியன்ஷிப் கோப்பைக்காகப் போட்டியிடுகின்றன.

ஜெய் ஷா
இந்த ஏலம் மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்திற்கும் ஒரு மாறுப்பட்ட பயணத்திற்கு வழி வகுக்கிறது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

மாற்றம்
#WPL ஆனது பெண்கள் கிரிக்கெட்டில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் மற்றும் ஒவ்வொரு பங்குதாரருக்கும் பயனளிக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய எகோசோடத்தை உறுதி செய்யும் என் டிவிட்டர் பதிவில் ஜெய் ஷா தெரிவித்தார்.