
ரூபாய்
இந்த ஐடியா தற்போது உலகில் பல நாடுகளுக்குப் பிடித்துப் போகவே தற்போது இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யப் பல நாடுகள் முன்வந்துள்ளன. இதனால் ஆசியாவில் டாலர் ஆதிக்கத்திற்குப் பெரும் பாதிப்பு உருவாகி வருகிறது.

வெளிநாடுகள் உடன் வர்த்தகம்
இந்தியா தனது சொந்த நாணயமாக ரூபாயில் வெளிநாடுகள் உடனான வர்த்தகம் செய்ய ஊக்குவித்து வரும் வேலையில், உலக நாடுகள் அடுத்தடுத்து இந்தியாவுடன் ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.

இந்தியன் பேங்க்ஸ் அசோசியேஷன்
இந்தியாவில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிநாட்டு வர்த்தகங்களை ரூபாய் நாணயத்திலேயே செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியன் பேங்க்ஸ் அசோசியேஷன் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான சுனில் மேத்தா தெரிவித்துள்ளார்.

Vostro கணக்குகள்
மேலும் அவர் இந்தியாவின் முன்னணி வங்கிகள் அனைத்தும் ரூபாய் நாணயத்தின் வாயிலாக வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் கட்டமைப்பையும், Vostro கணக்குகளையும் வேகமாக துவங்குகிறது.

இந்தியா – ரஷ்யா
முதல் கட்டமாக இந்தியா – ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்தை ரூபாய் மூலம் செய்யத் திட்டமிட்டு இருக்கும் வேலையில், விரைவில் பிற நாடுகளுக்கான Vostro கணக்குகள் திறந்து நிதி பரிமாற்றத்தைச் சீர்படுத்த உள்ளது.

2022 முதல்
இந்தியா – ரஷ்யா மத்தியிலான நிதி பரிமாற்றத்திற்கு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பேச்சுவார்த்தை துவங்கி பணிகள் நடந்து வருகிறது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
இந்திய ரூபாய் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் போது அனைத்தும் மதிப்பிலேயே செய்யும் டாலர், யூரோ போன்ற நாணயமாக மாற்றுவதற்கான செலவுகள் இருக்காது. இதேபோல் டாலர் அல்லது யூரோ மதிப்பு உயர்ந்தால் அதற்காகக் கூடுதல் தொகையை அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது.

இந்தியாவுக்கு ஜாக்பாட்
இது இந்தியாவுக்கு ஜாக்பாட், காரணம் இந்தியாவில் இறக்குமதி செய்யும் பொருட்களில் அதிக மதிப்பு கொண்ட கச்சா எண்ணெய், தங்கம், ராணுவ ஆயுதங்கள் தான் இதை வாங்கும் நாடுகள் என்று பார்த்தால் ரஷ்யா, வளைகுடா நாடுகள். இப்படியிருக்கையில் இரு தரப்பும் தற்போது ரூபாய் வாயிலாக வர்த்தகம் செய்ய தயாராக உள்ளது.

சிறு வணிகர்கள்
இதேபோல் இந்தப் பரிமாற்ற முறை சிறு வணிகர்களுக்கும் வரும் பட்சத்தில் ஈகாமர்ஸ் மற்றும் B2C பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் நன்மை அளிக்கும். இது மட்டும் அல்லாமல் டாலர் ஆதிக்கமும், அதன் புழக்கமும் பெரிய அளவில் தேக்கம் அடையும்.