
சோமோட்டோ
சோமோட்டோ தனது வர்த்தகத்தை நாட்டின் 2வது மற்றும் 3வது தர நகரங்களில் வேகமாக விரிவாக்கம் செய்து வரும் வேளையில் கூடுதல் முதலீடு செய்து வருகிறது, இதனால் லாப அளவுகளைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்வது கடுமையான சுமையாக உள்ளது.

10 நிமிட இன்ஸ்டென்ட் டெலிவரி
இதற்கிடையில் தான் அதிகச் செலவுகளை ஏற்படுத்தும் அல்லது போதுமான லாபத்தை அளிக்காத சேவைகளை நிறுத்த முடிவு செய்து வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சோமேட்டோ தனது உணவக பார்ட்னர்களிடம் 10 நிமிட டெலிவரி சேவையை நிறுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

லாபம்
இந்த இன்ஸ்டென்ட் சேவை மூலம் லாபம் பார்க்க முடியவில்லை என்றும், நிறுவனம் போதுமான ஆர்டர்கள் இதில் கிடைக்கவில்லை என்றும், இப்பரிவு மூலம் வருமானம் அதன் கட்டமைப்புக்கு கூட போதுமானதாக இல்லை, இதனால் இதை விரிவாக்கம் செய்ய முடியாது எனச் சோமேட்டோ தரப்பில் இருந்து வெளியானது.

சோமேட்டோ விளக்கம்
இந்த விஷயம் நாடு முழுவதும் பெரியதாக வெடித்த நிலையில், சோமேட்டோ நேரடியாக விளக்கம் கொடுத்துள்ளது. இதில் இன்ஸ்டென்ட் சேவை நிறுத்தப்படப்போவது இல்லை, தற்போது எங்களுடைய உணவக பார்ட்னர்களிடம் இருந்து புதிய மெனு, இப்பரிவு வர்த்தகத்தை மொத்தமாக ரீபிராண்டிங் செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

ஊழியர்களுக்குப் பாதிப்பு இல்லை
அனைத்து இன்ஸ்டென்ட் சேவைக்கான பினிஷிங் ஸ்டேஷன் அப்படியே இருக்கும், இதனால் எந்த ஊழியர்களுக்கும் பாதிப்பு இல்லை என்று சோமேட்டோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில மாதங்களில் இந்த இன்ஸ்டென்ட் சேவை அறிமுகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 2022ல் அறிமுகம்
சோமேட்டோ தனது 10 நிமிட இன்ஸ்டென்ட் டெலிவரி சேவை திட்டத்தை மார்ச் 2022ல் பெரிய சர்ச்சைக்கு மத்தியில் அறிமுகம் செய்தது. இந்தச் சேவை பெரு நகரங்களில் அதிலும் குறிப்பாக மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே அளிக்கப்படுகிறது.

Low Value Order திட்டம்
இதேவேளையில் சோமேட்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய குறைந்த விலையில் தாலி அல்லது மீல்ஸ் அல்லது காம்போ உணவுகளை விற்பனை செய்யும் புதிய திட்டத்தில் களமிறங்கியுள்ளது. இதன் மூலம் குறைந்த மதிப்பு ஆர்டர் பிரிவில் கூடுதல் ஆர்டர் பெற முடியும்.

சோமேட்டோ திட்டம் என்ன..?
இந்தக் காம்மோ மீல்ஸ்-ஐ 10 நிமிட டெலிவரியில் கொண்டு வர போகிறதா அல்லது தனிப்பட்ட முறையில் 10 நிமிட டெலிவரி இயங்குமா..? அல்லது புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாமல் இந்த இன்ஸ்டென்ட் சேவையை மொத்தமாகக் கைவிடுமா..?