
நாகர்கோவில்: தமிழ்நாடு அரசு உயர் கல்வி துறையின் கீழ் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான இன்டர் பாலிடெக்னிக் தடகள சங்கம் சார்பில் திருநெல்வேலி மண்டல அளவிலான வாலிபால் போட்டி சேரன்மகாதேவி ஸ்கேட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. பல்வேறு கல்லுரி அணிகள் கலந்து கொண்டன. இதில் கலந்து கொண்ட நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி அணி மூன்றாமிடம் பிடித்து வெண்கலபதக்கம் பெற்றது.
அணியில் விளையாடிய மாணவர்களை அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ராஜா ஆறுமுகநயினார், துணை முதல்வர் சில்வியாஹனா, உடல்கல்வி இயக்குனர் சுப்ரதீபன், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.